அகப்பொருள் - One Line Questions

1. முல்லை நிலத்திற்குரிய மரம் எது? கொன்றை, காயா
2. முல்லை நிலத்திற்குரிய நீர் எது? காட்டாறு
3. மருத நிலத்திற்குரிய நீர் எது? ஆறு, குளம்
4. நெய்தல் நிலத்திற்குரிய நீர் எது? மணற்கிணறு
5. குறிஞ்சி நிலத்திற்குரிய நீர் எது? அருவி நீர், சுனை நீர்
6. மருத நிலத்திற்குரிய பெரும்பொழுதுகள் யாவை? ஆறு பெரும்பொழுதுகளும்
7. பாலை நிலத்திற்குரிய மக்கள் யார்? எயினர், எயினியர்
8. அகப்பொருள் இலக்கணத்தில் 'கைக்கிளை' என்பது எதைக் குறிக்கும்? ஒருதலைக் காமம்
9. முல்லை நிலத்திற்குரிய பொழுது எது? கார் காலம்
10. பாலை நிலத்திற்குரிய பெரும்பொழுது எது? வேனில், பின்பனி
11. நெய்தல் நிலத்திற்குரிய பறவை எது? கடற்காகம்
12. முல்லை நிலத்திற்குரிய மக்கள் யார்? ஆயர், இடையர்
13. மருத நிலத்திற்குரிய மக்கள் யார்? உழவர், கடையர்
14. நெய்தல் நிலத்திற்குரிய மக்கள் யார்? பரதவர், நுளைஞர்
15. ஐந்திணைகளில் குறிஞ்சி நிலத்திற்குரிய மக்கள் யார்? குறவர், குறத்தியர்
16. அகப்பொருள் இலக்கணத்தில் 'இருத்தல்' என்பது எந்தத் திணைக்குரிய உரிப்பொருள்? முல்லை
17. அகப்பொருள் இலக்கணத்தில் 'இரங்கல்' என்பது எந்தத் திணைக்குரிய உரிப்பொருள்? நெய்தல்
18. தொண்டகப் பறை எந்த நிலத்திற்குரியது? குறிஞ்சி
19. ஏறு கோட்பறை எந்த நிலத்திற்குரியது? முல்லை
20. மணமுழவு எந்த நிலத்திற்குரியது? மருதம்
21. துடி எந்த நிலத்திற்குரிய பறை? பாலை
22. குறிஞ்சி நிலத்திற்குரிய யாழ் எது? குறிஞ்சியாழ்
23. முல்லை நிலத்திற்குரிய யாழ் எது? முல்லையாழ்
24. மருத நிலத்திற்குரிய யாழ் எது? மருதயாழ்
25. நெய்தல் நிலத்திற்குரிய யாழ் எது? நெய்தல்யாழ்
26. குறிஞ்சி நிலத்திற்குரிய மலர் எது? குறுஞ்சி, காந்தள்
27. பெருந்திணை என்பது எதைக் குறிக்கும்? பொருந்தாக் காமம்
28. ஐந்திணைகளில் 'குறிஞ்சி' நிலத்திற்குரிய தெய்வம் எது? முருகன்
29. அகப்பொருள் இலக்கணத்தில் 'முதற்பொருள்' என்பது எவற்றை உள்ளடக்கியது? நிலம் மற்றும் பொழுது
30. பெரும்பொழுதுகள் எத்தனை வகைப்படும்? ஆறு
31. சிறுபொழுதுகள் ஒரு நாளில் எத்தனை வகையாகப் பிரிக்கப்படுகின்றன? ஆறு
32. அகப்பொருள் இலக்கணத்தில் 'கருப்பொருள்' என்பவை எவை? தெய்வம், உணவு, விலங்கு, பூ, மரம்
33. பாலை நிலத்திற்குரிய யாழ் எது? பாலை யாழ்
34. மருத நிலத்திற்குரிய உரிப்பொருள் எது? ஊடலும் ஊடல் நிமித்தமும்
35. பாலை நிலத்திற்குரிய உரிப்பொருள் எது? பிரிதல்
36. பின்வருவனவற்றில் குறிஞ்சி நிலத்திற்குரிய கருப்பொருள் எது? புலி
37. பாலை நிலத்திற்குரிய விலங்கு எது? வலிமையிழந்த யானை, புலி
38. மீன்கோட்பறை எந்த நிலத்திற்குரியது? நெய்தல்
39. மருத நிலத்திற்குரிய உணவு எது? செந்நெல், வெண்ணெல்
40. குறிஞ்சி நிலத்திற்குரிய சிறுபொழுது எது? யாமம்
41. நெய்தல் நிலத்திற்குரிய சிறுபொழுது எது? ஏற்பாடு
42. முல்லை நிலத்திற்குரிய சிறுபொழுது எது? மாலை
43. பாலை நிலத்திற்குரிய சிறுபொழுது எது? நண்பகல்
44. அகப்பொருள் இலக்கணத்தின் மூன்று முக்கிய அங்கங்கள் எவை? முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள்
45. முல்லை நிலத்திற்குரிய தெய்வம் எது? திருமால்
46. நெய்தல் நிலத்திற்குரிய தெய்வம் எது? வருணன்
47. பாலை நிலத்திற்குரிய நீர் எது? வற்றிய சுனை, கிணறு
48. தமிழின் அகப்பொருள் இலக்கணத்தில் 'அகம்' என்பது எதைக் குறிக்கிறது? தலைவன் தலைவி இடையிலான காதல்
49. நெய்தல் நிலத்திற்குரிய தொழில் எது? மீன் பிடித்தல் மற்றும் உப்பு விளைவித்தல்
50. மருத நிலத்திற்குரிய சிறுபொழுது எது? வைகறை