பொருள் இலக்கணம் - One Line Questions

1. புறப்பொருள் வெண்பாமாலை எதனைப் பற்றி விளக்குகிறது? புறப்பொருள்
2. வெட்சித்திணை எதனைக் குறிக்கும்? ஆநிரை கவர்தல்
3. கரந்தைத் திணை எதனைக் குறிக்கும்? ஆநிரை மீட்டல்
4. முல்லை நிலத்தின் மக்கள் யார்? ஆய்ச்சியர், இடையர்
5. மருத நிலத்தின் மக்கள் யார்? உழவர், உழத்தியர்
6. பெரும்பொழுது எத்தனை வகைப்படும்? ஆறு
7. நெய்தல் திணையின் உரிப்பொருள் யாது? இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
8. பொருள் இலக்கணம் எத்தனை வகைப்படும்? இரண்டு
9. முல்லைத் திணையின் உரிப்பொருள் யாது? இருத்தலும் இருத்தல் நிமித்தமும்
10. குறிஞ்சித் திணையின் உரிப்பொருள் யாது? புணர்தலும் புணர்தல் நிமித்தமும்
11. புறப்பொருள் எதனைப் பற்றியது? வீரம், கல்வி, கொடை மற்றும் புகழ்
12. குறிஞ்சி நிலத்தின் மக்கள் யார்? கானவர், குறவர்
13. நெய்தல் நிலத்தின் மக்கள் யார்? பரதவர், பரத்தியர்
14. பாலை நிலத்தின் மக்கள் யார்? எயினர், எயினியர்
15. தொல்காப்பியத்தின் எந்த அதிகாரத்தில் பொருள் இலக்கணம் விளக்கப்பட்டுள்ளது? பொருளதிகாரம்
16. பொருள் இலக்கணம் எதனைப் பற்றி விளக்குகிறது? வாழ்க்கை முறை மற்றும் ஒழுக்க நெறிகள்
17. அகப்பொருள் எத்தனை திணைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது? ஐந்து
18. நெய்தல் நிலத்தின் கருப்பொருள் யாது? கடற்காகம்
19. பாலை நிலத்தின் கருப்பொருள் யாது? புறா, பருந்து
20. குறிஞ்சி நிலத்தின் கருப்பொருள் யாது? கிளி, மயில்
21. மாலை பொழுது எந்த நிலத்திற்குரிய சிறுபொழுது? முல்லை
22. யாமம் எந்த நிலத்திற்குரிய சிறுபொழுது? குறிஞ்சி
23. வைகறை எந்த நிலத்திற்குரிய சிறுபொழுது? மருதம்
24. எற்பாடு எந்த நிலத்திற்குரிய சிறுபொழுது? நெய்தல்
25. கார்காலம் எந்தெந்த மாதங்களைக் குறிக்கும்? ஆவணி, புரட்டாசி
26. இளவேனில் காலம் எந்தெந்த மாதங்களைக் குறிக்கும்? சித்திரை, வைகாசி
27. முதுவேனில் காலம் எந்தெந்த மாதங்களைக் குறிக்கும்? ஆனி, ஆடி
28. குறிஞ்சி நிலத்திற்குரிய தெய்வம் எது? முருகன்
29. முல்லை நிலத்திற்குரிய தெய்வம் எது? திருமால்
30. நெய்தல் நிலத்திற்குரிய தெய்வம் எது? வருணன்
31. அகப்பொருள் இலக்கணத்தை கூறும் நூல் எது? தொல்காப்பியம்
32. சிறுபொழுது எத்தனை வகைப்படும்? ஆறு
33. பொருள் இலக்கணத்தில் முதற்பொருள் என்பது எவற்றைக் குறிக்கும்? நிலம் மற்றும் பொழுது
34. பொருள் இலக்கணத்தில் கூறப்படும் 'கருப்பொருள்' எத்தனை வகைப்படும்? பதினான்கு
35. நண்பகல் எந்த நிலத்திற்குரிய சிறுபொழுது? பாலை
36. மருதத் திணையின் உரிப்பொருள் யாது? ஊடலும் ஊடல் நிமித்தமும்
37. பாலைத் திணையின் உரிப்பொருள் யாது? பிரிதலும் பிரிதல் நிமித்தமும்
38. வஞ்சித் திணை எதனைக் குறிக்கும்? மண் ஆசை கருதி போரிடுதல்
39. காஞ்சித் திணை எதனைக் குறிக்கும்? மதிலைக் காத்தல்
40. தும்பைத் திணை எதனைக் குறிக்கும்? இரு மன்னர்களும் வலிமை கருதி போரிடுதல்
41. நொச்சித் திணை எதனைக் குறிக்கும்? மதிலைக் காத்தல்
42. உழிஞைத் திணை எதனைக் குறிக்கும்? மதிலை வளைத்தல்
43. குளிர் காலம் எந்தெந்த மாதங்களைக் குறிக்கும்? ஐப்பசி, கார்த்திகை
44. முன்பனிக் காலம் எந்தெந்த மாதங்களைக் குறிக்கும்? மார்கழி, தை
45. பின்பனிக் காலம் எந்தெந்த மாதங்களைக் குறிக்கும்? மாசி, பங்குனி
46. முல்லை நிலத்தின் கருப்பொருள் யாது? முயல், மான்
47. மருத நிலத்தின் கருப்பொருள் யாது? நாரை, நீர் கோழி
48. பாலை நிலத்திற்குரிய தெய்வம் எது? கொற்றவை
49. மருத நிலத்திற்குரிய தெய்வம் எது? இந்திரன்
50. அகப்பொருள் எதனைப் பற்றியது? தலைவன் தலைவி இடையிலான காதல்