இரத்தம் மற்றும் இரத்த சுழற்சி - One Line Questions
1.
வெள்ளை இரத்த அணுக்களின் ஆயுட்காலம் எவ்வளவு? —
10-15 நாட்கள்
2.
இரத்த தானம் செய்யும்போது ஒருமுறைக்கு எவ்வளவு இரத்தம் எடுக்கப்படுகிறது? —
350-450 மி.லி
3.
மனிதனின் இயல்பான இரத்த அழுத்தம் எவ்வளவு? —
120/80 mmHg
4.
உடலில் உள்ள மொத்த இரத்தத்தின் அளவு சராசரியாக எவ்வளவு? —
5-6 லிட்டர்
5.
மனித உடலில் இரத்தத்தின் pH அளவு பொதுவாக எவ்வளவு இருக்கும்? —
7.35 - 7.45
6.
இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் எத்தனை நாட்கள்? —
120 நாட்கள்
7.
இரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில் எத்தனை சதவீத புரதம் உள்ளது? —
7-8%
8.
இரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில் எவ்வளவு சதவீதம் நீர் உள்ளது? —
90%
9.
எந்த இரத்த வகை 'உலகளாவிய கொடையாளி' (Universal Donor) என்று அழைக்கப்படுகிறது? —
O-
10.
இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்தும் கருவி எது? —
பேஸ்மேக்கர்
11.
எந்த இரத்த வகை 'உலகளாவிய ஏற்பி' (Universal Recipient) என்று அழைக்கப்படுகிறது? —
AB+
12.
இரத்த வெள்ளை அணுக்களின் முக்கிய பணி என்ன? —
உடலை நோய் கிருமிகளிடமிருந்து பாதுகாத்தல்
13.
இரத்த தட்டுக்கள் (Platelets) எதனுடன் தொடர்புடையவை? —
இரத்த உறைதல்
14.
இதயத்தின் வலது பக்கம் எந்த வகையான இரத்தத்தை கொண்டிருக்கும்? —
ஆக்சிஜன் குறைந்த இரத்தம்
15.
இரத்தத்தின் முக்கிய புரதம் எது? —
மேற்கூறிய அனைத்தும்
16.
மனித உடலில் இரத்தத்தை சுத்திகரிக்கும் முக்கிய உறுப்பு எது? —
சிறுநீரகம்
17.
இரத்தத்தில் உள்ள யூரியாவை வடிகட்டும் உறுப்பு எது? —
சிறுநீரகம்
18.
இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு எதனால் கட்டுப்படுத்தப்படுகிறது? —
இன்சுலின்
19.
மனித இதயத்தில் எத்தனை அறைகள் உள்ளன? —
நான்கு
20.
இதயத்தின் வால்வுகள் எதற்குக் காரணமாகின்றன? —
இரத்தம் பின்னோக்கி செல்வதைத் தடுக்க
21.
இரத்த சிவப்பணுக்களில் நியூக்ளியஸ் (கரு) உண்டா? —
இல்லை
22.
இரத்த தட்டுக்களின் மற்றொரு பெயர் என்ன? —
திரோம்போசைட்டுகள்
23.
எந்த உறுப்பு 'சிவப்பணுக்களின் கல்லறை' என்று அழைக்கப்படுகிறது? —
மண்ணீரல்
24.
இரத்த சிவப்பணுக்கள் ஆக்சிஜனுடன் இணைந்து எதை உருவாக்குகிறது? —
ஆக்சி ஹீமோகுளோபின்
25.
இரத்த வகை முறையை (Blood Grouping) கண்டறிந்தவர் யார்? —
கார்ல் லான்ட்ஸ்டெய்னர்
26.
இரத்தத்தை உடலின் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்லும் இரத்த நாளங்கள் எவை? —
தமனிகள்
27.
இரத்தத்தில் காணப்படும் மிகச்சிறிய இரத்த அணுக்கள் எவை? —
இரத்த தட்டுக்கள்
28.
மனித உடலில் அதிக அளவுள்ள இரத்த அணுக்கள் எவை? —
சிவப்பணுக்கள்
29.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் செல்கள் எவை? —
வெள்ளை அணுக்கள்
30.
இரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவின் நிறம் என்ன? —
மஞ்சள்
31.
இதயத்தின் விரிவடைதல் நிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது? —
டயஸ்டோல்
32.
இரத்தத்தில் காணப்படும் மிக அதிகப்படியான தாது எது? —
சோடியம்
33.
இதயத்தின் சுருக்கத்திற்கு என்ன பெயர்? —
சிஸ்டோல்
34.
இரத்தத்தில் உள்ள கார்பன்-டை-ஆக்சைடை நுரையீரலுக்கு எடுத்துச் செல்லும் இரத்த நாளங்கள் எவை? —
சிறைகள்
35.
இரத்த அழுத்தம் எப்போது அதிகமாக இருக்கும்? —
ஓடும்போது
36.
இரத்த அழுத்தம் எதனால் அளவிடப்படுகிறது? —
ஸ்பைக்மோமனோமீட்டர்
37.
நுரையீரலில் இருந்து இதயத்திற்கு ஆக்சிஜன் மிகுந்த இரத்தத்தை கொண்டு வரும் குழாய் எது? —
நுரையீரல் சிறை
38.
இரத்தத்தின் திரவப் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது? —
பிளாஸ்மா
39.
இதயத்தின் தசைகளுக்கு இரத்தத்தை வழங்கும் தமனிகள் எது? —
கரோனரி தமனிகள்
40.
இரத்த சோகை (Anemia) எந்த தாதுப்பொருள் குறைபாட்டினால் ஏற்படுகிறது? —
இரும்பு
41.
இரத்த சிவப்பணுக்கள் (RBC) எங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன? —
எலும்பு மஜ்ஜை
42.
இரத்த வெள்ளை அணுக்கள் எங்கு அழிக்கப்படுகின்றன? —
மண்ணீரல்
43.
இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினில் காணப்படும் உலோகம் எது? —
இரும்பு
44.
இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறையும் நோய் எது? —
அனீமியா
45.
இதயத்தின் தசைச் சுவர்களின் தடிமனான பகுதி எது? —
இடது வென்ட்ரிக்கிள்
46.
இரத்த ஓட்டத்தை கண்டறிந்தவர் யார்? —
வில்லியம் ஹார்வி
47.
இரத்த உறைதலுக்குத் தேவையான வைட்டமின் எது? —
வைட்டமின் K
48.
இதயத் துடிப்பை கேட்க உதவும் கருவி எது? —
ஸ்டெதஸ்கோப்
49.
இரத்த உறைதலுக்கு உதவும் முக்கிய புரதம் எது? —
ஃபைப்ரினோஜென்
50.
இரத்த நாளங்களில் இரத்தம் உறைவதைத் தடுக்கும் பொருள் எது? —
ஹெப்பாரின்