உரிய பொருளைக் கண்டறிதல் - One Line Questions

1. 'எழில்' என்ற சொல்லின் பொருள் யாது? அழகு
2. 'மேதினி' என்ற சொல்லின் பொருள் யாது? உலகம்
3. 'அகம்' என்பதன் பொருள் என்ன? உள்ளம்
4. 'ஏர்' என்ற சொல்லின் பொருள் என்ன? உழவுக்கருவி
5. 'இலகு' என்பதன் பொருள் யாது? எளிமை
6. 'விழி' என்பதன் பொருள் யாது? கண்
7. 'கலை' என்பதன் பொருள் யாது? கல்வி
8. 'அறிஞர்' என்பதன் பொருள் யாது? கல்வியாளர்
9. 'நவை' என்ற சொல்லின் பொருள் யாது? குற்றம்
10. 'சலதி' என்ற சொல்லின் பொருள் என்ன? கடல்
11. 'வாவி' என்ற சொல்லின் பொருள் என்ன? குளம்
12. 'கரம்' என்பதன் பொருள் யாது? கை
13. 'வண்மை' என்பதன் பொருள் என்ன? கொடை
14. 'சினம்' என்பதன் பொருள் என்ன? கோபம்
15. 'பரிதி' என்ற சொல்லின் பொருள் யாது? சூரியன்
16. 'மகிழ்வு' என்பதன் எதிர்ச்சொல் அல்லாதது எது? சந்தோஷம்
17. 'சீர்' என்பதன் பொருள் யாது? சிறப்பு
18. 'தூய' என்பதன் பொருள் யாது? சுத்தமான
19. 'முகில்' என்ற சொல்லின் பொருள் எது? மேகம்
20. 'படை' என்பதன் பொருள் என்ன? சேனை
21. 'அகராதி' என்பதன் பொருள் யாது? சொற்களஞ்சியம்
22. 'பகர்' என்ற சொல்லின் பொருள் யாது? சொல்
23. 'இயல்பு' என்ற சொல்லின் பொருள் என்ன? தன்மை
24. 'சிரம்' என்பதன் பொருள் என்ன? தலை
25. 'கொடி' என்பதன் பொருள் யாது? தாவரம்
26. 'துணிவு' என்பதன் பொருள் எது? தைரியம்
27. 'செம்மை' என்பதன் பொருள் யாது? நன்மை
28. 'மதியம்' என்ற சொல்லின் பொருள் என்ன? நிலவு
29. 'அன்பு' என்பதன் பொருள் யாது? நேசம்
30. 'நிமிர்' என்ற சொல்லின் பொருள் என்ன? நேராக இருத்தல்
31. 'நாணயம்' என்ற சொல்லின் பொருள் எது? நேர்மை
32. 'பாகம்' என்பதன் பொருள் என்ன? பகுதி
33. 'அன்னம்' என்ற சொல்லின் பொருள் என்ன? உணவு
34. 'அறிவு' என்பதன் சரியான பொருள் என்ன? புத்தி
35. 'மலர்' என்பதன் வேறு பெயர் என்ன? புஷ்பம்
36. 'மண்' என்பதன் பொருள் யாது? பூமி
37. 'துயரம்' என்ற சொல்லின் சரியான பொருள் எது? துன்பம்
38. 'துயர்' என்பதன் பொருள் என்ன? துன்பம்
39. 'நிலவு' என்பதன் மாற்றுப் பெயர் எது? மதி
40. 'தரு' என்ற சொல்லின் பொருள் என்ன? மரம்
41. 'மதிப்பு' என்பதன் பொருள் என்ன? மரியாதை
42. 'ஆழி' என்ற சொல்லின் பொருள் என்ன? கடல்
43. 'நனி' என்பதன் பொருள் என்ன? மிகுதி
44. 'கயல்' என்ற சொல்லின் பொருள் என்ன? மீன்
45. 'தடம்' என்பதன் பொருள் யாது? வழி
46. 'புவி' என்பதன் பொருள் யாது? பூமி
47. 'வேகம்' என்பதன் பொருள் யாது? விரைவு
48. 'புறம்' என்பதன் பொருள் யாது? வெளி
49. 'மறை' என்ற சொல்லின் பொருள் என்ன? வேதம்
50. 'பணி' என்பதன் பொருள் என்ன? வேலை