தன்வினை பிறவினை - One Line Questions

1. 'அசைந்தது' - இதன் பிறவினை வடிவம் எது? அசைவித்தது
2. 'அமைந்தது' - இதன் பிறவினை வடிவம் எது? அமைத்தது
3. 'அறைந்தான்' - இதன் பிறவினை வடிவம் எது? அறைவித்தான்
4. 'அழுதான்' - இதன் பிறவினை வடிவம் எது? அழுவித்தான்
5. தன்வினைச் சொல்லுக்குப் பிறவினைச் சொல்லை உருவாக்கும்போது பொதுவாகச் சேர்க்கப்படும் விகுதிகள் எவை? வி, பி, கு, சு
6. 'இருந்தான்' - இதன் பிறவினை வடிவம் எது? இருத்தினான்
7. 'உடைந்தான்' - இதன் பிறவினை வடிவம் எது? உடைத்தான்
8. 'உண்டான்' - இதற்குக் இணையான பிறவினைச் சொல் எது? ஊட்டினான்
9. 'உதிர்ந்தது' - இதன் பிறவினை வடிவம் எது? உதிர்த்தது
10. 'உறைந்தது' - இதன் பிறவினை வடிவம் எது? உறைவித்தது
11. 'எழுந்தான்' - இதன் பிறவினை வடிவம் எது? எழுப்பினான்
12. தன்வினை வாக்கியம் என்றால் என்ன? எழுவாய் ஒரு செயலைச் செய்வது
13. பிறவினை வாக்கியத்தின் முக்கிய பண்பு எது? எழுவாய் ஒரு செயலைச் செய்யத் தூண்டுதல்
14. பின்வருவனவற்றில் எது பிறவினைச்சொல்? ஓட்டினான்
15. 'கலைந்தது' - இதன் பிறவினை வடிவம் எது? கலைத்தது
16. 'குடித்தான்' - இதன் பிறவினை வடிவம் எது? குடிப்பித்தான்
17. 'குளித்தான்' - இதன் பிறவினை வடிவம் எது? குளிப்பாட்டினான்
18. 'குவிந்தது' - இதன் பிறவினை வடிவம் எது? குவித்தது
19. 'கேட்டான்' - இதன் பிறவினை வடிவம் எது? கேட்பித்தான்
20. 'சுழன்றது' - இதன் பிறவினை வடிவம் எது? சுழற்றியது
21. பிறவினை வாக்கியங்களில் பெரும்பாலும் இடம் பெறும் துணைவினை எது? செய்
22. 'மலர் பாடம் கற்பித்தாள்' - இது எந்த வகை வாக்கியம்? பிறவினை
23. 'அவன் ஆட்டுவித்தான்' - இதில் 'ஆட்டுவித்தான்' என்பது என்ன? பிறவினை
24. எழுவாய் ஒரு செயலைச் செய்யப் பிறரைத் தூண்டுவது எவ்வகை வினை? பிறவினை
25. 'அவன் பாடம் படித்தான்' - இதில் 'படித்தான்' என்பது என்ன? தன்வினை
26. 'ஆசிரியர் மாணவனைப் பாடம் படிக்க வைத்தார்' - இது என்ன வினை? பிறவினை
27. 'படித்தான்' - இதில் 'படித்தான்' என்பது எவ்வகை வினை? தன்வினை
28. 'படிக்க வைத்தான்' - இதில் 'படிக்க வைத்தான்' என்பது எவ்வகை வினை? பிறவினை
29. 'ஆடினான்' - இதில் 'ஆடினான்' என்பது எவ்வகை வினை? தன்வினை
30. 'ஆட்டுவித்தான்' - இதில் 'ஆட்டுவித்தான்' என்பது எவ்வகை வினை? பிறவினை
31. தன்வினை, பிறவினை பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியானது? அ மற்றும் ஆ ஆகிய இரண்டும் சரி.
32. 'தின்றான்' - இதன் பிறவினை வடிவம் எது? ஊட்டினான்
33. 'திறந்தது' - இதன் பிறவினை வடிவம் எது? திறப்பித்தது
34. 'நகைத்தான்' - இதன் பிறவினை வடிவம் எது? நகைப்பித்தான்
35. 'நடந்தான்' - இதன் பிறவினை வடிவம் என்ன? நடத்தினான்
36. 'நனைந்தது' - இதன் பிறவினை வடிவம் எது? நனைத்தது
37. 'நின்றான்' - இதன் பிறவினை வடிவம் எது? நிறுத்தினான்
38. 'படி' என்னும் தன்வினைச் சொல்லின் பிறவினை வடிவம் எது? படிப்பித்தான்
39. 'பறந்தது' - இதன் பிறவினை வடிவம் எது? பறப்பித்தது
40. 'பார்த்தான்' - இதற்குக் இணையான பிறவினைச் சொல் எது? காட்டினான்
41. 'பிறந்தான்' - இதன் பிறவினை வடிவம் எது? பிறப்பித்தான்
42. 'மலர் பாடம் படித்தாள்' - இது எந்த வகை வாக்கியம்? தன்வினை
43. 'அவன் ஆடினான்' - இதில் 'ஆடினான்' என்பது என்ன? தன்வினை
44. தன்வினை, பிறவினை பற்றிய இலக்கணத்தில் 'வினை' என்பது எதைக் குறிக்கிறது? வினைச்சொல்
45. 'மறைந்தது' - இதன் பிறவினை வடிவம் எது? மறைத்தது
46. 'மாறினான்' - இதன் பிறவினை வடிவம் எது? மாற்றினான்
47. பின்வருவனவற்றில் எது தன்வினைச்சொல் அல்ல? வருவித்தான்
48. 'வளர்ந்தான்' - இதன் பிறவினை வடிவம் எது? வளர்த்தான்
49. 'வாழ்ந்தான்' - இதன் பிறவினை வடிவம் எது? வாழவைத்தான்
50. தன்வினைச் சொற்களைப் பிறவினைச் சொற்களாக மாற்றும்போது வினைப்பகுதியில் எவை சேரும்? வி, பி