பொருள் இலக்கணம் - One Line Questions
1.
புறப்பொருள் வெண்பாமாலை எதனைப் பற்றி விளக்குகிறது? —
புறப்பொருள்
2.
வெட்சித்திணை எதனைக் குறிக்கும்? —
ஆநிரை கவர்தல்
3.
கரந்தைத் திணை எதனைக் குறிக்கும்? —
ஆநிரை மீட்டல்
4.
முல்லை நிலத்தின் மக்கள் யார்? —
ஆய்ச்சியர், இடையர்
5.
மருத நிலத்தின் மக்கள் யார்? —
உழவர், உழத்தியர்
6.
பெரும்பொழுது எத்தனை வகைப்படும்? —
ஆறு
7.
நெய்தல் திணையின் உரிப்பொருள் யாது? —
இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
8.
பொருள் இலக்கணம் எத்தனை வகைப்படும்? —
இரண்டு
9.
முல்லைத் திணையின் உரிப்பொருள் யாது? —
இருத்தலும் இருத்தல் நிமித்தமும்
10.
குறிஞ்சித் திணையின் உரிப்பொருள் யாது? —
புணர்தலும் புணர்தல் நிமித்தமும்
11.
புறப்பொருள் எதனைப் பற்றியது? —
வீரம், கல்வி, கொடை மற்றும் புகழ்
12.
குறிஞ்சி நிலத்தின் மக்கள் யார்? —
கானவர், குறவர்
13.
நெய்தல் நிலத்தின் மக்கள் யார்? —
பரதவர், பரத்தியர்
14.
பாலை நிலத்தின் மக்கள் யார்? —
எயினர், எயினியர்
15.
தொல்காப்பியத்தின் எந்த அதிகாரத்தில் பொருள் இலக்கணம் விளக்கப்பட்டுள்ளது? —
பொருளதிகாரம்
16.
பொருள் இலக்கணம் எதனைப் பற்றி விளக்குகிறது? —
வாழ்க்கை முறை மற்றும் ஒழுக்க நெறிகள்
17.
அகப்பொருள் எத்தனை திணைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது? —
ஐந்து
18.
நெய்தல் நிலத்தின் கருப்பொருள் யாது? —
கடற்காகம்
19.
பாலை நிலத்தின் கருப்பொருள் யாது? —
புறா, பருந்து
20.
குறிஞ்சி நிலத்தின் கருப்பொருள் யாது? —
கிளி, மயில்
21.
மாலை பொழுது எந்த நிலத்திற்குரிய சிறுபொழுது? —
முல்லை
22.
யாமம் எந்த நிலத்திற்குரிய சிறுபொழுது? —
குறிஞ்சி
23.
வைகறை எந்த நிலத்திற்குரிய சிறுபொழுது? —
மருதம்
24.
எற்பாடு எந்த நிலத்திற்குரிய சிறுபொழுது? —
நெய்தல்
25.
கார்காலம் எந்தெந்த மாதங்களைக் குறிக்கும்? —
ஆவணி, புரட்டாசி
26.
இளவேனில் காலம் எந்தெந்த மாதங்களைக் குறிக்கும்? —
சித்திரை, வைகாசி
27.
முதுவேனில் காலம் எந்தெந்த மாதங்களைக் குறிக்கும்? —
ஆனி, ஆடி
28.
குறிஞ்சி நிலத்திற்குரிய தெய்வம் எது? —
முருகன்
29.
முல்லை நிலத்திற்குரிய தெய்வம் எது? —
திருமால்
30.
நெய்தல் நிலத்திற்குரிய தெய்வம் எது? —
வருணன்
31.
அகப்பொருள் இலக்கணத்தை கூறும் நூல் எது? —
தொல்காப்பியம்
32.
சிறுபொழுது எத்தனை வகைப்படும்? —
ஆறு
33.
பொருள் இலக்கணத்தில் முதற்பொருள் என்பது எவற்றைக் குறிக்கும்? —
நிலம் மற்றும் பொழுது
34.
பொருள் இலக்கணத்தில் கூறப்படும் 'கருப்பொருள்' எத்தனை வகைப்படும்? —
பதினான்கு
35.
நண்பகல் எந்த நிலத்திற்குரிய சிறுபொழுது? —
பாலை
36.
மருதத் திணையின் உரிப்பொருள் யாது? —
ஊடலும் ஊடல் நிமித்தமும்
37.
பாலைத் திணையின் உரிப்பொருள் யாது? —
பிரிதலும் பிரிதல் நிமித்தமும்
38.
வஞ்சித் திணை எதனைக் குறிக்கும்? —
மண் ஆசை கருதி போரிடுதல்
39.
காஞ்சித் திணை எதனைக் குறிக்கும்? —
மதிலைக் காத்தல்
40.
தும்பைத் திணை எதனைக் குறிக்கும்? —
இரு மன்னர்களும் வலிமை கருதி போரிடுதல்
41.
நொச்சித் திணை எதனைக் குறிக்கும்? —
மதிலைக் காத்தல்
42.
உழிஞைத் திணை எதனைக் குறிக்கும்? —
மதிலை வளைத்தல்
43.
குளிர் காலம் எந்தெந்த மாதங்களைக் குறிக்கும்? —
ஐப்பசி, கார்த்திகை
44.
முன்பனிக் காலம் எந்தெந்த மாதங்களைக் குறிக்கும்? —
மார்கழி, தை
45.
பின்பனிக் காலம் எந்தெந்த மாதங்களைக் குறிக்கும்? —
மாசி, பங்குனி
46.
முல்லை நிலத்தின் கருப்பொருள் யாது? —
முயல், மான்
47.
மருத நிலத்தின் கருப்பொருள் யாது? —
நாரை, நீர் கோழி
48.
பாலை நிலத்திற்குரிய தெய்வம் எது? —
கொற்றவை
49.
மருத நிலத்திற்குரிய தெய்வம் எது? —
இந்திரன்
50.
அகப்பொருள் எதனைப் பற்றியது? —
தலைவன் தலைவி இடையிலான காதல்