வேர்ச்சொல் அறிதல் - One Line Questions

1. அடித்தான் என்பதன் வேர்ச்சொல் எது? அடி
2. அறிந்தான் என்பதன் வேர்ச்சொல் எது? அறி
3. அளித்தான் என்பதன் வேர்ச்சொல் எது? அளி
4. அழுதான் என்பதன் வேர்ச்சொல் எது? அழு
5. அழைத்தான் என்பதன் வேர்ச்சொல் எது? அழை
6. ஆக்கினான் என்பதன் வேர்ச்சொல் எது? ஆக்கு
7. இருந்தான் என்பதன் வேர்ச்சொல் எது? இரு
8. இறந்தான் என்பதன் வேர்ச்சொல் எது? இற
9. உடுத்தான் என்பதன் வேர்ச்சொல் எது? உடு
10. உண்டான் என்ற வினைமுற்றுச் சொல்லின் வேர்ச்சொல் என்ன? உண்
11. உரைத்தான் என்பதன் வேர்ச்சொல் எது? உரை
12. எடுத்தான் என்பதன் வேர்ச்சொல் எது? எடு
13. எழுதினான் என்பதன் வேர்ச்சொல் எது? எழுது
14. ஓடினான் என்பதன் வேர்ச்சொல் எது? ஓடு
15. காத்தான் என்பதன் வேர்ச்சொல் எது? கா
16. குறைத்தான் என்பதன் வேர்ச்சொல் எது? குறை
17. கூறினான் என்பதன் வேர்ச்சொல் எது? கூறு
18. கேட்டான் என்பதன் வேர்ச்சொல் எது? கேள்
19. கொடுத்தான் என்ற சொல்லின் வேர்ச்சொல் எது? கொடு
20. கொன்றான் என்பதன் வேர்ச்சொல் எது? கொல்
21. சிரித்தான் என்பதன் வேர்ச்சொல் எது? சிரி
22. சுமந்தான் என்பதன் வேர்ச்சொல் எது? சும
23. சென்றான் என்ற சொல்லின் வேர்ச்சொல் எது? செல்
24. செய்தான் என்பதன் வேர்ச்சொல் எது? செய்
25. தடுத்தான் என்பதன் வேர்ச்சொல் எது? தடு
26. தந்தான் என்பதன் வேர்ச்சொல் எது? தா
27. தொடுத்தான் என்பதன் வேர்ச்சொல் எது? தொடு
28. தொடுத்தான் என்பதன் வேர்ச்சொல் எது? தொடு
29. நட்டான் என்பதன் வேர்ச்சொல் எது? நட
30. நடந்தான் என்ற சொல்லின் வேர்ச்சொல் எது? நட
31. நினைத்தான் என்பதன் வேர்ச்சொல் எது? நினை
32. நின்றான் என்பதன் வேர்ச்சொல் எது? நில்
33. பகிர்ந்தான் என்பதன் வேர்ச்சொல் எது? பகிர்
34. படித்தான் என்ற சொல்லின் வேர்ச்சொல்லைக் கண்டறிக. படி
35. படைத்தான் என்பதன் வேர்ச்சொல் எது? படை
36. பயின்றான் என்பதன் வேர்ச்சொல் எது? பயில்
37. பார்த்தான் என்பதன் வேர்ச்சொல் எது? பார்
38. புனைந்தான் என்பதன் வேர்ச்சொல் எது? புனை
39. பெற்றான் என்பதன் வேர்ச்சொல் எது? பெறு
40. மகிழ்ந்தான் என்பதன் வேர்ச்சொல் எது? மகிழ்
41. மறைத்தான் என்பதன் வேர்ச்சொல் எது? மறை
42. முடித்தான் என்பதன் வேர்ச்சொல் எது? முடி
43. வடித்தான் என்பதன் வேர்ச்சொல் எது? வடி
44. வளர்ந்தான் என்பதன் வேர்ச்சொல் எது? வளர்
45. வளர்த்தான் என்பதன் வேர்ச்சொல் எது? வளர்
46. வந்தான் என்ற சொல்லின் வேர்ச்சொல் எது? வா
47. வேர்ச்சொல் என்பது ஒரு சொல்லின் எந்தப் பகுதியைக் குறிக்கும்? பகுதி
48. வேர்ச்சொல் எப்போதும் எந்த நிலையில் இருக்க வேண்டும்? கட்டளைப் பொருள்
49. வென்றான் என்பதன் வேர்ச்சொல் எது? வெல்
50. வைத்தான் என்பதன் வேர்ச்சொல் எது? வை