டெல்லி சுல்தானியம் - One Line Questions

1. முதலாம் பானிப்பட் போர் நடைபெற்ற ஆண்டு எது? 1526
2. ஆக்ரா நகரத்தை நிர்மாணித்தவர் யார்? சிக்கந்தர் லோடி
3. டெல்லி சுல்தானியத்தின் அதிகாரப்பூர்வ மொழி எது? பாரசீகம்
4. இரத்தமும் இரும்பும் கொள்கையைப் பின்பற்றிய சுல்தான் யார்? பால்பன்
5. தலைநகரை டெல்லியிலிருந்து தேவகிரிக்கு (தௌலதாபாத்) மாற்றிய சுல்தான் யார்? முகமது பின் துக்ளக்
6. இபின் பதூதா என்ற மொராக்கோ நாட்டு பயணி யாருடைய காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்தார்? முகமது பின் துக்ளக்
7. ஏழை மக்களுக்கு உதவுவதற்காக 'திவான்-இ-கைராத்' என்ற துறையை நிறுவியவர் யார்? பெரோஸ் ஷா துக்ளக்
8. அமீர் குஸ்ரு யாருடைய அரசவையில் கவிஞராக இருந்தார்? மேற்கண்ட அனைவரும்
9. டெல்லியில் உள்ள 'ஹவுஸ் காஸ்' ஏரியை உருவாக்கியவர் யார்? அலாவுதீன் கில்ஜி
10. டெல்லி சுல்தானியத்தின் எந்த சுல்தான் கல்வி மற்றும் கற்றலை ஊக்குவிக்க 'மதரசாக்களை' அதிகளவில் கட்டினார்? பெரோஸ் ஷா துக்ளக்
11. டெல்லி சுல்தானிய ஆட்சியில் 'முக்தி' அல்லது 'வலி' என்பவர் யார்? இக்தாவின் ஆளுநர்
12. சுல்தானிய காலத்தில் நிலங்கள் எத்தனை வகைகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன? மூன்று
13. டெல்லி சுல்தானியத்தின் நிர்வாகத்தில் 'காசி' என்பவர் யார்? நீதிபதி
14. சுல்தானிய காலத்தில் 'இக்தா' என்பது எதைக் குறிக்கிறது? நில மானியம்
15. அடிமை வம்சத்தை தோற்றுவித்தவர் யார்? குத்புதீன் ஐபக்
16. டெல்லி சுல்தானியத்தின் எந்த சுல்தான் 'பைபோஸ்' (மன்னரின் பாதத்தை முத்தமிடுதல்) முறையை அறிமுகப்படுத்தினார்? பால்பன்
17. எந்த சுல்தான் தன்னை 'கடவுளின் நிழல்' என்று அழைத்துக் கொண்டார்? பால்பன்
18. சுல்தானிய காலத்தில் 'பரித்' என்றால் யார்? உளவுத்துறை அதிகாரி
19. துக்ளக் வம்சத்தில் மிக நீண்ட காலம் ஆட்சி செய்தவர் யார்? பெரோஸ் ஷா துக்ளக்
20. டெல்லி சுல்தானியத்தின் கடைசி வம்சம் எது? லோடி
21. டெல்லி சுல்தானியத்தை ஆட்சி செய்த முதல் வம்சம் எது? அடிமை வம்சம்
22. குதுப் மினார் கட்டுமானப் பணியைத் தொடங்கி வைத்தவர் யார்? குத்புதீன் ஐபக்
23. டெல்லி சுல்தானியத்தின் உண்மையான நிறுவனர் என்று அழைக்கப்படுபவர் யார்? இல்துமிஷ்
24. இக்தாதாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்? இல்துமிஷ்
25. டெல்லி சுல்தானியத்தின் காலத்தில் கட்டப்பட்ட 'அலை தர்வாசா' யாரால் கட்டப்பட்டது? அலாவுதீன் கில்ஜி
26. குத்புதீன் ஐபக் எந்த விளையாட்டு விளையாடும்போது உயிரிழந்தார்? போலோ (சௌகான்)
27. டெல்லி சுல்தானியத்தின் முதல் பெண் ஆட்சியாளர் யார்? ரஸியா சுல்தான்
28. மாலிக் கபூர் படையெடுத்தபோது மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர் யார்? மாறவர்மன் குலசேகரன்
29. கில்ஜி வம்சத்தின் ஆட்சியைத் தொடங்கி வைத்தவர் யார்? ஜலாலுதீன் கில்ஜி
30. தென்னிந்தியாவின் மீது படையெடுத்த முதல் டெல்லி சுல்தான் யார்? அலாவுதீன் கில்ஜி
31. முகமது பின் துக்ளக் அறிமுகப்படுத்திய அடையாள நாணயம் எதனால் செய்யப்பட்டது? செம்பு
32. இல்துமிஷ் அறிமுகப்படுத்திய நாணய முறை எது? தங்கா மற்றும் ஜிதால்
33. அமீர் குஸ்ரு எதைக் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது? சித்தார்
34. அலாவுதீன் கில்ஜியின் விலை கட்டுப்பாட்டு முறையை விவரிக்கும் நூல் எது? தாரிக்-இ-அலாய்
35. சுல்தானிய காலத்தில் இராணுவ அமைச்சகம் எவ்வாறு அழைக்கப்பட்டது? திவான்-இ-அர்ஸ்
36. இப்ராகிம் லோடிக்கு எதிராக பாபரை அழைத்தவர் யார்? மேற்கண்ட அனைவரும்
37. லோடி வம்சத்தின் முதல் ஆட்சியாளர் யார்? பஹ்லுல் லோடி
38. நாற்பதின்மர் (சகல் கானி) குழுவை உருவாக்கியவர் யார்? இல்துமிஷ்
39. படை வீரர்களுக்கு ரொக்கமாக ஊதியம் வழங்கிய முதல் சுல்தான் யார்? அலாவுதீன் கில்ஜி
40. பெரோஸ் ஷா துக்ளக் நிறுவிய புதிய நகரம் எது? பெரோசாபாத்
41. டெல்லி சுல்தானியத்தின் வீழ்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தது எது? பலவீனமான வாரிசுகள்
42. அலாவுதீன் கில்ஜியின் தளபதியான மாலிக் கபூர் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்? குஜராத்
43. டெல்லி சுல்தானியத்தின் நிர்வாகத்தில் 'வக்கீல்-இ-தார்' என்பது எதைக் குறிக்கிறது? மன்னரின் இல்ல நிர்வாகி
44. அலாவுதீன் கில்ஜியின் ஆட்சிக் காலத்தில் மங்கோலிய படையெடுப்புகளைத் தடுத்தவர் யார்? ஜபர்கான்
45. துக்ளக் வம்சத்தை நிறுவியவர் யார்? கியாசுதீன் துக்ளக்
46. 1398-ல் தைமூர் இந்தியாவின் மீது படையெடுத்தபோது டெல்லியை ஆண்ட சுல்தான் யார்? நாசிருதீன் முகமது ஷா துக்ளக்
47. சுல்தானிய காலத்தில் நில வருவாயை வசூலிக்கும் அதிகாரி எவ்வாறு அழைக்கப்பட்டார்? அமில்
48. சையது வம்சத்தை தோற்றுவித்தவர் யார்? கிசிர்கான்
49. அலாவுதீன் கில்ஜி அறிமுகப்படுத்திய சந்தை சீர்திருத்தங்களை நிர்வகித்த அதிகாரி யார்? ஷஹ்னா-இ-மண்டி
50. முதலாம் பானிப்பட் போரில் இப்ராகிம் லோடியை தோற்கடித்தவர் யார்? பாபர்