வெப்பப் பரிமாற்றம் மற்றும் வெப்ப விரிவு - One Line Questions

1. நீரின் அசாதாரண விரிவு எந்த வெப்பநிலையில் நடைபெறுகிறது? 0°C முதல் 4°C வரை
2. வெப்ப விரிவு குணகத்தின் அலகு என்ன? K^-1
3. நீர் ஏன் வெப்பத்தை கடத்த கடினமான ஊடகமாக உள்ளது? வெப்பக் கடத்தாப் பண்பு
4. வெப்பநிலை உயரும் போது திரவத்தின் அடர்த்தி என்னவாகும்? குறையும்
5. வெப்பநிலை அளவிட உதவும் கருவி எது? வெப்பமானி
6. வெப்பக் கடத்தலில் மூலக்கூறுகள் இடப்பெயர்ச்சி அடைகின்றனவா? இல்லை
7. வெப்பச் சலனத்தில் மூலக்கூறுகள் இடப்பெயர்ச்சி அடைகின்றனவா? ஆம்
8. வெப்பக் கடத்தாப் பொருட்களுக்கு ஒரு சிறந்த உதாரணம் எது? பிளாஸ்டிக்
9. வெப்பக் கடத்தலுக்குத் தேவைப்படும் நிபந்தனை எது? ஊடகம் அவசியம்
10. வெப்பக் கதிர்வீச்சு எந்த அலையில் பயணிக்கிறது? மின் காந்த அலைகள்
11. வெற்றிடத்தில் வெப்பம் பரவும் ஒரே முறை எது? கதிர்வீச்சு
12. வெப்பத்தை மிகக் குறைவாகக் கடத்தும் பொருட்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? கடத்தாப் பொருட்கள்
13. உலோகங்கள் பொதுவாக வெப்பத்தை நன்கு கடத்தக் காரணம் என்ன? கட்டற்ற எலக்ட்ரான்கள்
14. வெப்பக் கதிர்வீச்சை மிகக் குறைவாக உமிழும் நிறம் எது? வெள்ளை
15. வெப்பப் பரிமாற்றத்தில் வெப்பம் எவ்வாறு பாய்கிறது? அதிக வெப்பநிலையிலிருந்து குறைந்த வெப்பநிலை நோக்கி
16. ஒரு பொருளின் வெப்பத்தை அதிகரிக்கும் போது அதன் மூலக்கூறுகளின் இயக்கம் என்னவாகும்? அதிகரிக்கும்
17. வெப்பநிலையின் SI அலகு எது? கெல்வின்
18. தெர்மோமீட்டரில் பயன்படுத்தப்படும் திரவம் எது? பாதரசம்
19. பின்வருவனவற்றுள் எது வெப்பத்தை நன்கு கடத்தாப் பொருள்? எபோனைட்
20. வாயுக்களில் வெப்ப விரிவு எவ்வாறு இருக்கும்? திட மற்றும் திரவங்களை விட அதிகம்
21. வெப்பச் சலனம் எங்கு நடைபெறாது? திடப்பொருட்கள்
22. வெப்பக் கதிர்வீச்சு பரவுவதற்கு ஊடகம் தேவையா? தேவையில்லை
23. வெப்பம் ஒரு பொருளின் எந்தப் பண்பை மாற்றுகிறது? மேற்கண்ட அனைத்தும்
24. வெப்பப்படுத்தும் போது ஒரு பொருளின் பரப்பு அதிகரிப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது? பரப்பு விரிவு
25. வெப்பநிலை அதிகரிக்கும் போது திண்மங்களின் நீளம் அதிகரிப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது? நேரியல் விரிவு
26. வெப்பப்படுத்தும் போது நீளம் அதிகரிப்பது எந்த வகை விரிவு? நீள் விரிவு
27. வெப்பப்படுத்தும் போது ஒரு பொருளின் கன அளவு அதிகரிப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது? பருமன் விரிவு
28. திரவங்களின் வெப்ப விரிவு எதனைச் சார்ந்தது? பருமன் விரிவு
29. வெப்பமானியில் வெப்பநிலை உயரும் போது பாதரசம் விரிவடைவது எந்த வகை விரிவு? பருமன் விரிவு
30. வெப்ப விரிவு குணகம் எதைக் குறிக்கிறது? வெப்பத்தால் ஏற்படும் மாற்ற அளவு
31. ஒரு பொருளின் வெப்ப விரிவு எதனைச் சார்ந்து இருக்காது? பொருளின் நிறம்
32. வெப்பம் கடத்தப்படும் வீதம் எதனைப் பொறுத்தது? மேற்கண்ட அனைத்தும்
33. வெப்பம் கடத்தப்படும் திசை எதனைப் பொறுத்தது? வெப்பநிலை வேறுபாடு
34. வெப்பத்தை நன்கு கடத்தும் உலோகம் எது? வெள்ளி
35. எந்தப் பொருள் வெப்பத்தை மிக வேகமாக கடத்தும்? தாமிரம்
36. வெப்பம் மற்றும் ஆற்றலின் அலகு எது? ஜூல்
37. ஒரு பொருளின் வெப்பநிலையை 1 டிகிரி உயர்த்தத் தேவைப்படும் வெப்பம் என்ன? தன்வெப்ப ஏற்புத்திறன்
38. வெப்பப் பரிமாற்றம் எப்போது நின்றுவிடும்? வெப்ப சமநிலை எட்டப்படும் போது
39. வெப்பநிலை மாறாமல் ஒரு பொருளின் நிலை மாறுவதற்கு என்ன பெயர்? நிலை மாற்றம்
40. இரயில் தண்டவாளங்களுக்கு இடையே இடைவெளி விடப்படுவதன் காரணம் என்ன? வெப்ப விரிவு
41. வெப்ப இயக்கவியலின் முதல் விதி எதைக் கூறுகிறது? ஆற்றல் அழிவின்மை விதி
42. வெப்பம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பரவும் முறைக்கு என்ன பெயர்? வெப்பப் பரிமாற்றம்
43. திரவங்கள் மற்றும் வாயுக்களில் வெப்பம் பரவும் முறை எது? வெப்பச் சலனம்
44. சூரியனிடமிருந்து பூமிக்கு வெப்பம் வரும் முறை எது? வெப்பக் கதிர்வீச்சு
45. திடப்பொருட்களில் வெப்பம் பரவும் முதன்மையான முறை எது? வெப்பக் கடத்தல்
46. வெப்பக் கதிர்வீச்சைத் தடுக்கும் சாதனம் எது? வெப்பக் குடுவை
47. பொருட்களை வெப்பப்படுத்தும்போது அவை விரிவடைவது எவ்வாறு அழைக்கப்படுகிறது? வெப்ப விரிவு
48. மின்சாரக் கம்பிகள் கோடைகாலத்தில் தொய்வாக இருப்பதற்கு என்ன காரணம்? வெப்ப விரிவு
49. வெப்பநிலை 0 K (கெல்வின்) என்பது எதைக் குறிக்கிறது? முழுமையான சுழி
50. வெப்பக் கதிர்வீச்சை மிக அதிகமாக உமிழும் நிறம் எது? கருப்பு