அயற்சொல் தமிழ்ச்சொல் - One Line Questions

1. 'ஜவாப்' என்பது எந்த மொழிச் சொல்? அரபு
2. 'ஜன்னல்' என்பது எந்த மொழிச் சொல்? போர்த்துகீசியம்
3. 'குமாஸ்தா' என்ற சொல் எந்த மொழியைச் சேர்ந்தது? பாரசீகம்
4. 'வசூல்' என்பது எந்த மொழிச் சொல்? அரபு
5. 'பார்சல்' என்பது எந்த மொழிச் சொல்? ஆங்கிலம்
6. 'கமிஷன்' என்பது எந்த மொழிச் சொல்? ஆங்கிலம்
7. தமிழ்நாட்டில் வழங்கிய பிற மொழிச் சொற்களை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்? நான்கு
8. கீழ்க்கண்டவற்றுள் 'தற்சமம்' வகையைச் சேர்ந்த சொல் எது? கமலம்
9. 'பீங்கான்' எந்த நாட்டுச் சொல்? சீனம்
10. 'பீங்கான்' என்ற சொல் எந்த மொழியிலிருந்து வந்தது? சீனம்
11. கீழ்க்கண்டவற்றுள் 'தற்பவம்' வகையைச் சேர்ந்த சொல் எது? புஷ்பம்
12. தமிழ் மொழியில் கலந்துள்ள அயற்சொற்களை நீக்கித் தூய தமிழில் பேசுவதை எவ்வாறு அழைப்பர்? தனித்தமிழ் இயக்கம்
13. பிற மொழிச் சொற்களைத் தமிழில் எழுதும் போது எதைப் பின்பற்றி எழுத வேண்டும்? தமிழ் ஒலிப்பு முறை
14. 'கமலம்' என்பது எவ்வகைச் சொல்? தற்சமம்
15. 'லக்ஷ்மி' என்பது எவ்வகைச் சொல்? தற்சமம்
16. 'புஷ்பம்' என்பது எவ்வகைச் சொல்? தற்பவம்
17. 'ஜாதகம்' என்பது எவ்வகைச் சொல்? தற்சமம்
18. 'விமானம்' என்பது எவ்வகைச் சொல்? தற்சமம்
19. 'சமுத்திரம்' என்பது எவ்வகைச் சொல்? தற்சமம்
20. 'வருடம்' என்பது எவ்வகைச் சொல்? தற்சமம்
21. 'ராஜா' என்பது எவ்வகைச் சொல்? தற்சமம்
22. 'சன்னல்' என்பது எவ்வகைச் சொல்? திசைச்சொல்
23. கீழ்க்கண்டவற்றில் எது அயற்சொல் வகைப்பாட்டில் சேராதது? இயற்சொல்
24. வடமொழியில் இருந்து வந்து தமிழில் ஒலியளவில் சிறிதளவு மாற்றம் பெற்று வழங்கும் சொற்கள் எவை? தற்பவம்
25. 'பரிட்சை' என்பது எவ்வகைச் சொல்? தற்பவம்
26. 'ஆயுதம்' என்பது எவ்வகைச் சொல்? தற்பவம்
27. 'கோவில்' என்ற சொல் 'கோயில்' என மருவி வருவது எவ்வகை மாற்றம்? தற்பவம்
28. வடமொழியில் இருந்து மாற்றம் அடையாமல் அப்படியே தமிழுக்கு வரும் சொற்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? தற்சமம்
29. வடமொழி அல்லாத பிற மொழிகளில் இருந்து தமிழ் மொழிக்கு வந்த சொற்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? திசைச்சொல்
30. 'துருக்கி' மொழியிலிருந்து தமிழுக்கு வந்த சொல் எது? துப்பாக்கி
31. 'துப்பாக்கி' என்ற சொல் எந்த மொழியிலிருந்து வந்தது? துருக்கி
32. தமிழ் மொழியில் பிற மொழிச் சொற்கள் கலந்து வருவதை எவ்வாறு அழைக்கிறோம்? அயற்சொல்
33. 'மிளகாய்' என்பது எந்த மொழிச் சொல்? தெலுங்கு
34. 'பண்டிகை' என்ற சொல் எந்த மொழியிலிருந்து வந்தது? தெலுங்கு
35. 'அமளி' என்பது எந்த மொழிச் சொல்? தெலுங்கு
36. 'கேடி' என்பது எந்த மொழிச் சொல்? தெலுங்கு
37. 'அம்பாரி' என்பது எந்த மொழிச் சொல்? அரபு
38. 'கஜானா' என்பது எந்த மொழிச் சொல்? அரபு
39. 'ஜப்தி' என்பது எந்த மொழிச் சொல்? உருது
40. 'காகிதம்' என்பது எந்த மொழிச் சொல்? அரபு
41. 'தாலுகா' என்பது எந்த மொழிச் சொல்? உருது
42. 'ரொக்கம்' என்ற சொல் எந்த மொழியிலிருந்து வந்தது? அரபு
43. 'சர்க்கார்' என்பது எந்த மொழிச் சொல்? பாரசீகம்
44. 'ஜில்லா' என்ற சொல் எந்த மொழியிலிருந்து வந்தது? அரபு
45. 'ஜன்னல்' என்ற சொல் எந்த மொழியின் 'ஜனேலா' என்பதிலிருந்து வந்தது? போர்த்துகீசியம்
46. 'சாவி' என்ற சொல் எந்த மொழியிலிருந்து தமிழுக்கு வந்தது? போர்த்துகீசியம்
47. 'மேஜை' என்ற சொல் எந்த மொழியிலிருந்து வந்தது? போர்த்துகீசியம்
48. 'அலமாரி' என்ற சொல் எந்த மொழியிலிருந்து வந்தது? போர்த்துகீசியம்
49. தமிழ் மொழியில் மிகுதியாகக் கலந்துள்ள அயற்சொற்கள் எந்த மொழியைச் சேர்ந்தவை? வடமொழி
50. 'கடிதம்' என்பது எந்த மொழிச் சொல்? வடமொழி