இயக்கவியலில் பொது அறிவியல் விதிகள் - One Line Questions

1. நிலவில் ஒரு பொருளின் எடை பூமியில் உள்ள எடையில் எத்தனை பங்கு இருக்கும்? 1/6
2. ஈர்ப்பு மாறிலியின் (G) மதிப்பு என்ன? 6.673 x 10^-11 N m²/kg²
3. பூமியின் ஈர்ப்பு முடுக்கம் (g) சராசரியாக எவ்வளவு? 9.8 m/s²
4. பூமியின் மையத்தில் ஈர்ப்பு முடுக்கம் (g) மதிப்பு என்ன? 0 m/s²
5. நியூட்டனின் இரண்டாம் விதியின் கணித வடிவம் எது? F = ma
6. மையநோக்கு விசைக்கான சூத்திரம் எது? F = mv²/r
7. உந்தத்தின் அலகு என்ன? kg m/s
8. முடுக்கத்தின் அலகு என்ன? m/s²
9. பொருட்களின் நிறை எங்கு சென்றாலும் மாறாது, ஆனால் எது மாறும்? எடை
10. உராய்வு விசை எப்போதும் இயக்கத்தை எந்த திசையில் எதிர்க்கும்? எதிர் திசையில்
11. இயக்கவியலில் 'நிலைமம்' என்பதன் பொருள் என்ன? இயக்கத்தை எதிர்க்கும் பண்பு
12. பொருட்களின் இயக்கத்தைத் தடுக்கும் விசை எது? உராய்வு விசை
13. தொலைவில் உள்ள இரண்டு பொருள்களுக்கு இடையே செயல்படும் விசை எது? ஈர்ப்பு விசை
14. எந்த விசை வாகனங்களின் டயர்கள் சாலைகளில் வழுக்காமல் இருக்க உதவுகிறது? உராய்வு விசை
15. மையவிலக்கு விசை என்பது எத்தகைய விசை? போலி விசை
16. விசை மற்றும் காலத்தின் பெருக்கற்பலன் எவ்வாறு அழைக்கப்படுகிறது? விசைத் துடிப்பு (Impulse)
17. பொருளின் மீது செயல்படும் விசைக்கும் முடுக்கத்திற்கும் உள்ள தொடர்பு என்ன? நேர் விகிதம்
18. இயக்கவியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்? கலிலியோ கலிலி
19. பொருட்களின் இயக்கம் பற்றிய அறிவியல் பிரிவு எது? இயக்கவியல் (Mechanics)
20. தடையின்றி கீழே விழும் பொருளின் முடுக்கம் எதனால் ஏற்படுகிறது? புவியீர்ப்பு விசை
21. எடையின் SI அலகு எது? நியூட்டன்
22. ஒரு பொருள் ஓய்வு நிலையிலிருந்து சீரான முடுக்கத்துடன் இயங்கினால் அதன் திசைவேகம் என்னவாகும்? அதிகரிக்கும்
23. சறுக்கும் உராய்வு, உருளும் உராய்வை விட எப்படி இருக்கும்? அதிகமாக
24. பொருட்களின் மீது செயல்படும் ஈர்ப்பு விசையை அளவிட்டவர் யார்? காவெண்டிஷ்
25. கோள்களின் சுழற்சி காலத்தின் இருமடி அதன் அரை நெட்டச்சின் மும்மடிக்கு நேர் விகிதத்தில் இருக்கும் என்பது எந்த விதி? கெப்ளர் மூன்றாம் விதி
26. விசையின் SI அலகு எது? நியூட்டன்
27. விசை ஒரு எத்தகைய அளவு? வெக்டர் (திசையுள்ள அளவு)
28. ஒரு பொருளின் மீது விசை செயல்படும்போது என்ன மாற்றத்தை ஏற்படுத்தலாம்? மேற்கூறிய அனைத்தும்
29. பொருளின் மீது விசை செயல்படாத வரை அதன் நிலை மாறாமல் இருக்கும் என்ற விதி எது? நியூட்டனின் முதல் விதி
30. விசையின் எண்மதிப்பை அளவிட உதவும் விதி எது? நியூட்டனின் இரண்டாம் விதி
31. ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு என்பது எந்த விதி? நியூட்டனின் மூன்றாம் விதி
32. துப்பாக்கியால் சுடும்போது துப்பாக்கி பின்னோக்கி நகர்வது எந்த விதியின் அடிப்படையில் அமைகிறது? நியூட்டனின் மூன்றாம் விதி
33. உந்த மாறா விதி எதனுடன் தொடர்புடையது? நியூட்டனின் மூன்றாம் விதி
34. கோள்களின் இயக்கத்தைப் பற்றிய விதிகளைக் கூறியவர் யார்? கெப்ளர்
35. ஒரு பொருள் நேர்க்கோட்டில் சீரான வேகத்தில் சென்றால் அதன் முடுக்கம் என்ன? சுழி
36. நிலைமத்தின் அளவு எதனைச் சார்ந்தது? நிறை
37. பொருளின் நிறை மாறாமல் திசைவேகம் இருமடங்கானால், உந்தம் என்னவாகும்? இரு மடங்காகும்
38. எடை என்பது என்ன? பொருளின் மீது செயல்படும் ஈர்ப்பு விசை
39. உராய்வை குறைக்கப் பயன்படும் பொருள் எது? மசகு எண்ணெய் (Lubricants)
40. பொருளொன்று சீரான வட்ட இயக்கத்தில் இருக்கும்போது அதன் திசைவேகம் என்னவாகும்? மாறிக்கொண்டே இருக்கும்
41. ஒரு பொருளின் மீது செயல்படும் நிகர விசை சுழியாக இருந்தால், அந்தப் பொருள் எவ்வாறு இருக்கும்? ஓய்வு நிலையிலோ அல்லது சீரான திசைவேகத்திலோ இருக்கும்
42. நியூட்டனின் முதல் இயக்க விதி எதனை விளக்குகிறது? நிலைமம்
43. கோள்கள் சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன என்பது கெப்ளரின் எந்த விதி? முதல் விதி
44. கோள்களின் பரப்பளவு வேகம் மாறிலியாக இருக்கும் என்பது கெப்ளரின் எந்த விதி? இரண்டாம் விதி
45. ராக்கெட்டுகள் ஏவப்படுதல் நியூட்டனின் எந்த விதியின் அடிப்படையில் செயல்படுகிறது? மூன்றாம் விதி
46. நியூட்டனின் எந்த விதி 'சமநிலை விதி' என்றும் அழைக்கப்படுகிறது? முதல் விதி
47. சீரான வட்ட இயக்கத்தில் பொருளின் முடுக்கம் எத்திசையில் செயல்படும்? மையத்தை நோக்கி
48. ஒரு பொருளின் நிறை மற்றும் திசைவேகத்தின் பெருக்கற்பலன் எவ்வாறு அழைக்கப்படுகிறது? உந்தம்
49. திசைவேகம் மாறும் வீதம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? முடுக்கம்
50. ஒரு பொருளின் திசைவேகம் மாறுபடும்போது ஏற்படுவது எது? முடுக்கம்