ஒருபொருள் பன்மொழி - One Line Questions

1. ஆகாயம் என்ற பொருளைத் தரும் சொல் எது? அம்பரம்
2. பொருள் என்ற பொருளைத் தரும் சொல் எது? அர்த்தம்
3. மகிழ்ச்சி என்ற பொருளைத் தரும் மற்றொரு சொல்? ஆனந்தம்
4. கடல் என்ற பொருளைத் தரும் சொல் எது? ஆழி
5. வீடு என்ற பொருளைத் தரும் சொல் எது? இல்லம்
6. மகிழ்ச்சி என்ற பொருளைக் குறிக்கும் சொல் எது? உவகை
7. பகைவன் என்ற பொருளைத் தரும் சொல் எது? எதிரி
8. அழகு என்ற பொருளைத் தரும் சொல் எது? எழில்
9. ஒருபொருள் தரும் பல சொற்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? ஒருபொருள் பன்மொழி
10. தங்கம் என்ற பொருளைத் தரும் சொல் எது? கனகம்
11. யானை என்ற பொருளைத் தரும் சொல் எது? கரி
12. ஒளி என்ற பொருளைத் தரும் சொல் எது? காந்தி
13. காடு என்ற பொருளைத் தரும் சொல் எது? கானகம்
14. வாள் என்ற பொருளைத் தரும் சொல் எது? கிருபாணம்
15. பயணம் என்ற பொருளைத் தரும் சொல் எது? சஞ்சாரம்
16. புயல் என்ற பொருளைத் தரும் சொல் எது? சண்டமாருதம்
17. கோபம் என்ற பொருளைத் தரும் சொல் எது? சினம
18. தண்ணீர் என்ற பொருளைத் தரும் சொல் எது? ஜலம்
19. அறிவு என்ற பொருளைத் தரும் சொல் எது? ஞானம்
20. நிலம் என்ற பொருளைத் தரும் சொற்களில் பொருந்தாதது எது? கதிர்
21. குளிர்ச்சி என்ற பொருளைத் தரும் சொற்கள் எவை? தண்மை, குளிர்
22. பூமி என்ற பொருளைத் தரும் சொல் எது? தரணி
23. மரம் என்ற பொருளைத் தரும் சொல் எது? தரு
24. சந்திரன் என்ற பொருளைத் தரும் சொல் எது? திங்கள்
25. வேகம் என்ற பொருளைத் தரும் சொல் எது? துரிதம்
26. பழமை என்ற பொருளைத் தரும் சொல் எது? தொன்மை
27. நண்பன் என்ற பொருளைத் தரும் சொல் எது? தோழன்
28. தலைவன் என்ற பொருளைத் தரும் சொல் எது? நாயகன்
29. இரவு என்ற பொருளைத் தரும் சொல் எது? நிசி
30. பணம் என்ற பொருளைத் தரும் சொல் எது? நிதி
31. அன்பு என்ற பொருளைத் தரும் சொல் எது? நேசம்
32. ஆயுதம் என்ற பொருளைத் தரும் சொல் எது? படை
33. பறவை என்ற பொருளைத் தரும் சொல் எது? பட்சி
34. குதிரை என்ற பொருளைத் தரும் சொல் எது? பரி
35. சூரியன் என்பதன் ஒருபொருள் பன்மொழி எது? பரிதி
36. மலர் என்ற சொல்லிற்கு இணையான சொல் எது? பூ
37. பெண் என்ற பொருளைத் தரும் சொல் எது? மங்கை
38. அறிவு என்ற பொருளைத் தரும் சொல் எது? மதி
39. தேன் என்ற பொருளைத் தரும் சொல் எது? மது
40. தென்றல் என்ற பொருளைத் தரும் சொல் எது? மந்தமாருதம்
41. வீரன் என்ற பொருளைத் தரும் சொல் எது? மறவன்
42. சிங்கம் என்ற பொருளைத் தரும் சொல் எது? மிருகராஜன்
43. உடல் என்ற பொருளைத் தரும் சொல் எது? மேனி
44. முகம் என்ற பொருளைத் தரும் சொல் எது? வதனம்
45. மலை என்ற பொருளைத் தரும் சொல் எது? வரை
46. நீர் என்ற பொருளைத் தரும் சொல் எது? வாரி
47. வானம் என்ற பொருளைத் தரும் சொல் எது? விண்
48. ஆசை என்ற பொருளைத் தரும் சொல் எது? விருப்பம்
49. வெற்றி என்ற பொருளைத் தரும் சொல் எது? வெற்றி
50. மன்னன் என்ற பொருளைத் தரும் சொல் எது? வேந்தன்