பொருள் இலக்கணமும் கோட்பாடுகளும் - One Line Questions
1.
கார் காலம் என்பது எந்த மாதங்களை உள்ளடக்கியது? —
ஆவணி, புரட்டாசி
2.
கூதிர்காலம் என்பது எந்த மாதங்களை உள்ளடக்கியது? —
ஐப்பசி, கார்த்திகை
3.
முன்பனிக்காலம் என்பது எந்த மாதங்களை உள்ளடக்கியது? —
மார்கழி, தை
4.
பின்பனிக்காலம் என்பது எந்த மாதங்களை உள்ளடக்கியது? —
மாசி, பங்குனி
5.
இளவேனிற்காலம் என்பது எந்த மாதங்களை உள்ளடக்கியது? —
சித்திரை, வைகாசி
6.
முதுவேனிற்காலம் என்பது எந்த மாதங்களை உள்ளடக்கியது? —
ஆனி, ஆடி
7.
தமிழில் பொருள் இலக்கணம் எத்தனை வகைப்படும்? —
இரண்டு
8.
பாலை நிலத்தின் மக்கள் யார்? —
எயினர், எயிற்றியர்
9.
தொல்காப்பியம் கூறும் புறத்திணைகளின் எண்ணிக்கை யாது? —
ஏழு
10.
அகத்திணைகள் மொத்தம் எத்தனை? —
ஏழு
11.
கைக்கிளை என்பது எதனை குறிக்கும்? —
ஒருதலைக் காமம்
12.
பெருந்திணை என்பது எதனை குறிக்கும்? —
பொருந்தாக் காமம்
13.
புறப்பொருள் எதனைப் பற்றிய செய்திகளைக் கூறுகிறது? —
வீரம் மற்றும் கொடை
14.
பொருள் இலக்கணம் எதனைக் குறிக்கும்? —
வாழ்க்கை முறை
15.
குறிஞ்சி நிலத்திற்குரிய தெய்வம் எது? —
முருகன்
16.
முல்லை நிலத்திற்குரிய தெய்வம் எது? —
திருமால்
17.
மருத நிலத்திற்குரிய தெய்வம் எது? —
இந்திரன்
18.
பாலை நிலத்திற்குரிய தெய்வம் எது? —
கொற்றவை
19.
ஐந்திணைகளுக்குப் பொதுவான கருப்பொருள் எது? —
இவை அனைத்தும்
20.
பொருள் இலக்கணத்தை விளக்கும் முக்கிய நூல் எது? —
தொல்காப்பியம்
21.
பெரும்பொழுதுகள் எத்தனை வகைப்படும்? —
ஆறு
22.
சிறுபொழுதுகள் எத்தனை வகைப்படும்? —
ஆறு
23.
பொருள் இலக்கணத்தின் முதற்பொருள் யாவை? —
நிலமும் பொழுதும்
24.
ஐந்திணைகளில் உரிப்பொருள் எதனை குறிக்கும்? —
ஒழுக்கம்
25.
குறிஞ்சி நிலத்தின் உரிப்பொருள் யாது? —
புணர்தலும் புணர்தல் நிமித்தமும்
26.
முல்லை நிலத்தின் உரிப்பொருள் யாது? —
இருத்தல்
27.
மருத நிலத்தின் உரிப்பொருள் யாது? —
ஊடல்
28.
நெய்தல் நிலத்தின் உரிப்பொருள் யாது? —
இரங்கல்
29.
பாலை நிலத்தின் உரிப்பொருள் யாது? —
பிரிதல்
30.
வெட்சித் திணை எதனைக் குறிக்கிறது? —
ஆநிரை கவர்தல்
31.
கரந்தைத்திணை எதனைக் குறிக்கிறது? —
ஆநிரை மீட்டல்
32.
வஞ்சித்திணை எதனைக் குறிக்கிறது? —
மண்ணாசை
33.
நொச்சித்திணை எதனைக் குறிக்கிறது? —
கோட்டை காத்தல்
34.
உழிஞைத்திணை எதனைக் குறிக்கிறது? —
கோட்டை முற்றுகை
35.
தும்பைத்திணை எதனைக் குறிக்கிறது? —
இரு நாட்டு மன்னர்கள் போர்
36.
வாகைத்திணை எதனைக் குறிக்கிறது? —
வெற்றி
37.
காஞ்சித்திணை எதனைக் குறிக்கிறது? —
மண்ணாசையை தடுத்தல்
38.
தொல்காப்பியத்தில் பொருள் அதிகாரம் எத்தனையாவது அதிகாரம்? —
மூன்றாவது
39.
நெய்தல் நிலத்திற்குரிய தெய்வம் எது? —
வருணன்
40.
ஐந்திணைக்குரிய நிலங்கள் எத்தனை? —
ஐந்து
41.
குறிஞ்சி நிலத்திற்குரிய பொழுது எது? —
யாமம்
42.
முல்லை நிலத்திற்குரிய பொழுது எது? —
மாலை
43.
மருத நிலத்திற்குரிய பொழுது எது? —
வைகறை
44.
நெய்தல் நிலத்திற்குரிய பொழுது எது? —
எற்பாடு
45.
பாலை நிலத்திற்குரிய பொழுது எது? —
நண்பகல்
46.
அகப்பொருள் எதனைப் பற்றிய செய்திகளைக் கூறுகிறது? —
காதல்
47.
முல்லை நிலத்தின் மக்கள் யார்? —
தோன்றல்
48.
மருத நிலத்தின் மக்கள் யார்? —
ஊரன், மகிழ்நன்
49.
நெய்தல் நிலத்தின் மக்கள் யார்? —
சேர்ப்பன், புலம்பன்
50.
குறிஞ்சி நிலத்தின் மக்கள் யார்? —
வெற்பன், சிலம்பன்