வழு வழா நிலை மற்றும் வழுவமைதி - Online Test

30:00
1. திணை, பால், எண், இடம், காலம் ஆகியவற்றில் ஏற்படும் பிழைகளை எவ்வாறு அழைப்பார்கள்?
2. பிழையின்றி இலக்கண முறைப்படி பேசுவதும் எழுதுவதும் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
3. 'செழியன் வந்தது' - இது எவ்வகையான வழு?
4. 'கண்ணகி உண்டான்' - இது எவ்வகையான வழு?
5. 'நாங்கள் வந்தான்' - இது எவ்வகையான வழு?
6. 'நீ வந்தேன்' - இது எவ்வகையான வழு?
7. 'நான் வந்தான்' - இது எவ்வகையான வழு?
8. 'நான் நேற்று வருவேன்' - இது எவ்வகையான வழு?
9. இலக்கணப்படி பிழையுடையதாக இருந்தாலும், இலக்கண ஆசிரியர்களால் பிழையன்று என ஏற்றுக்கொள்ளப்படுவது எது?
10. 'என் அம்மை வந்தாள்' - இதில் 'அம்மை' என்பது எதனை உணர்த்துகிறது?

Test Results

0/0