சொல் இலக்கணம் - Question Bank
1. பகுபதத்தின் உறுப்புகளில் 'சந்தி' பெரும்பாலும் எங்கு வரும்?
2. எழுத்துக்கள் ஒன்றிணைந்து பொருள் தந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
3. பகுபத உறுப்புகளில் சாரியை ஏன் வருகிறது?
4. ஆசிரியர் என்பது எவ்வகைப்பெயர்?
5. சொல் இலக்கணத்தின் அடிப்படை எது?
6. பகுபத உறுப்புகளில் விகாரம் என்பது எதன் மாற்றம்?
7. ஓடுதல் என்பது எவ்வகைச் சொல்?
8. மலர் என்பது எவ்வகைப்பெயர்?
9. பகுபதத்தில் விகாரம் என்பது எந்த உறுப்பில் நிகழும்?
10. உரிச்சொல் எதைக் குறிக்க வரும்?
11. இடைச்சொல் எவ்வகைச் சொற்களைச் சார்ந்து வரும்?
12. பண்புப் பெயருக்கு சரியான உதாரணம் எது?
13. பெயர்ச்சொற்களை வகைப்படுத்துவதில் 'சினை' என்பது எதைக் குறிக்கும்?
14. சொல் இலக்கணம் எதை விளக்குகிறது?
15. பகுதி எப்போதும் எவ்வாறு இருக்க வேண்டும்?
16. வினைமுற்றுப் பகுபதத்தில் விகுதி எதை உணர்த்தும்?
17. பகுபத உறுப்புகளில் விகுதி எதைக் காட்டாது?
18. ஓரெழுத்து ஒரு மொழியில் 'கோ' என்பதன் பொருள் என்ன?
19. ஆ, ஈ, ஊ என்பவை எதைக் குறிக்கும்?
20. பெயர்ச்சொல்லின் வகை அல்லாதது எது?
21. பகுபதமாக இல்லாத சொல் எது?
22. பகுபத உறுப்புகளில் விகாரம் என்பது என்ன?
23. பகுபத உறுப்புகளில் சாரியை எங்கு வரும்?
24. பகுதியையும் விகுதியையும் இணைக்கும் உறுப்பு எது?
25. காலத்தைக் காட்டும் பகுபத உறுப்பு எது?
26. பகுபதத்தின் இறுதியில் அமையும் உறுப்பு எது?
27. பகுபதத்தின் முதன்மை உறுப்பு எது?
28. பகுபத உறுப்புகள் எத்தனை?
29. காரணச் சிறப்புப் பெயர் எது?
30. காரணப் பொதுப்பெயர் எது?
31. இடுகுறிச் சிறப்புப் பெயர் எது?
32. இடுகுறிப் பொதுப்பெயர் எது?
33. காரணப்பெயருக்கு உதாரணம் எது?
34. இடுகுறிப் பெயர் என்றால் என்ன?
35. மாநகரம் என்பதில் 'மா' என்பது எவ்வகைச் சொல்?
36. சொற்களின் தன்மையை மிகுதிப்படுத்த வருவது எது?
37. பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லையும் சார்ந்து வரும் சொல் எது?
38. தனித்து இயங்காத சொல் எது?
39. தொழிற்பெயருக்கு உதாரணம் எது?
40. பண்புப்பெயருக்கு உதாரணம் எது?
41. சினைப்பெயர் என்பது எதைக் குறிக்கும்?
42. காலப்பெயருக்கு உதாரணம் எது?
43. இடப்பெயருக்கு உதாரணம் எது?
44. பொருட்பெயருக்கு உதாரணம் தருக.
45. பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்?
46. வினைச்சொல் எதைக் குறிக்கும்?
47. ஒன்றன் பெயரை குறிக்கும் சொல் எது?
48. பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் ஆகிய நான்கும் எதனுடைய வகைகள்?
49. சொல் எத்தனை வகைப்படும்?
50. ஓரெழுத்து ஒரு மொழியில் 'தீ' என்பதன் பொருள் என்ன?