முதற்பொருள் கருப்பொருள் மற்றும் உரிப்பொருள் - One Line Questions

1. முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியவற்றை உள்ளடக்கிய இலக்கணம் எது? அகப்பொருள் இலக்கணம்
2. கருப்பொருள் என்பது எதனைக் குறிக்கும்? அந்தந்த நிலத்திற்குரிய தெய்வம், உணவு, தொழில் முதலியன
3. முல்லை நிலத்திற்குரிய தொழில் எது? ஆநிரை மேய்த்தல்
4. மருதம் மற்றும் நெய்தல் நிலங்களுக்குரிய பெரும்பொழுதுகள் யாவை? ஆறு பெரும்பொழுதுகளும்
5. மருத நிலத்திற்குரிய தெய்வம் எது? இந்திரன்
6. நெய்தல் நிலத்திற்குரிய உரிப்பொருள் எது? இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
7. முதற்பொருளில் அடங்கும் 'பொழுது' எத்தனை வகைப்படும்? இரண்டு
8. வைகறை என்பது எந்த நேரத்தைக் குறிக்கும்? இரவின் விடியற்காலை
9. முல்லை நிலத்திற்குரிய உரிப்பொருள் எது? இருத்தலும் இருத்தல் நிமித்தமும்
10. பாலை நிலத்திற்குரிய பெரும்பொழுது எது? இளவேனில், முதுவேனில், பின்பனி
11. மருத நிலத்திற்குரிய உரிப்பொருள் எது? ஊடலும் ஊடல் நிமித்தமும்
12. மருத நிலத்தின் மக்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறார்கள்? ஊரன், மகிழ்நன்
13. பாலை நிலத்தின் மக்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறார்கள்? எயினர், எயினியர்
14. நெய்தல் நிலத்திற்குரிய சிறுபொழுது எது? எற்பாடு
15. எற்பாடு என்பதன் பொருள் என்ன? எல்லை + பாடு (சூரியன் மறையும் நேரம்)
16. அகத்திணைகள் மொத்தம் எத்தனை? ஏழு
17. உரிப்பொருள் என்பது எதனைக் குறிக்கும்? ஐந்திணைக்குரிய ஒழுக்கங்கள்
18. முல்லை நிலத்திற்குரிய பெரும்பொழுது எது? கார் காலம்
19. குறிஞ்சி நிலத்திற்குரிய பெரும் பொழுது எது? கூதிர் மற்றும் முன்பனி
20. ஆண்டுக்குரிய ஆறு பெரும்பொழுதுகள் எவை? கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில்
21. ஒரு நாளின் ஆறு சிறுபொழுதுகள் எவை? வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம்
22. குறிஞ்சி நிலத்தின் கருப்பொருளில் அடங்கும் 'பறவை' எது? கிளி, மயில்
23. ஐந்திணைகளுக்கு உரிய நிலப்பகுதிகள் எவை? குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை
24. பாலை நிலத்திற்குரிய தெய்வம் எது? கொற்றவை
25. மருத நிலத்தின் கருப்பொருளில் அடங்கும் 'மலர்' எது? செங்கழுநீர், தாமரை
26. நெய்தல் நிலத்தின் மக்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறார்கள்? சேர்ப்பன், புலம்பன்
27. முல்லை நிலத்திற்குரிய தெய்வம் எது? திருமால்
28. ஐந்திணைகளுக்குப் பொதுவான கருப்பொருள் எது? இவை அனைத்தும் நிலத்திற்கு நிலம் மாறும்
29. குறிஞ்சி நிலத்திற்குரிய தொழில் எது? தேனெடுத்தல், கிழங்கு அகழ்தல்
30. குறிஞ்சி நிலத்தின் பறை எது? தொண்டகம்
31. முல்லை நிலத்தின் மக்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறார்கள்? தோன்றல், மனைவியர்
32. யாமம் என்பது எந்த நேரத்தைக் குறிக்கும்? நடு இரவு
33. பாலை நிலத்திற்குரிய சிறுபொழுது எது? நண்பகல்
34. தமிழின் அகப்பொருள் இலக்கணத்தில் 'முதற்பொருள்' எதைக் குறிக்கிறது? நிலமும் பொழுதும்
35. மருத நிலத்திற்குரிய தொழில் எது? நெல் அரிதல், கலை பறித்தல்
36. பாலை நிலத்திற்குரிய உரிப்பொருள் எது? பிரிதலும் பிரிதல் நிமித்தமும்
37. குறிஞ்சி நிலத்திற்குரிய உரிப்பொருள் எது? புணர்தலும் புணர்தல் நிமித்தமும்
38. நெய்தல் நிலத்தின் கருப்பொருளில் அடங்கும் 'மரம்' எது? புன்னை, ஞாழல்
39. மருத நிலத்தின் பறை எது? மணமுழா, நெல்லினரி பறை
40. முல்லை நிலத்திற்குரிய சிறுபொழுது எது? மாலை
41. நெய்தல் நிலத்திற்குரிய தொழில் எது? மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல்
42. நெய்தல் நிலத்தின் பறை எது? மீன்கோட்பறை
43. முல்லை நிலத்தின் கருப்பொருளில் அடங்கும் 'விலங்கு' எது? முயல், மான்
44. குறிஞ்சி நிலத்திற்குரிய தெய்வம் எது? முருகன்
45. குறிஞ்சி நிலத்திற்குரிய சிறுபொழுது எது? யாமம்
46. நெய்தல் நிலத்திற்குரிய தெய்வம் எது? வருணன்
47. பாலை நிலத்திற்குரிய நீர்நிலை எது? வற்றிய சுனை, கிணறு
48. பாலை நிலத்திற்குரிய தொழில் எது? வழிப்பறி செய்தல், நிழல் போரிடல்
49. குறிஞ்சி நிலத்தின் மக்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறார்கள்? வெற்பன், சிலம்பன்
50. மருத நிலத்திற்குரிய சிறுபொழுது எது? வைகறை