யாப்பு உறுப்புகள் - Question Bank
1. யாப்பிலக்கணத்தின் அடிப்படை உறுப்பு எது?
2. செய்யுளில் 'நிரை' அசை என்பது எதனை உள்ளடக்கியது?
3. செய்யுளில் 'நேர்' அசை என்பது எதனை உள்ளடக்கியது?
4. தமிழ் இலக்கணத்தில் யாப்பிலக்கணம் எதனைப் பற்றி விளக்குகிறது?
5. யாப்பு என்பதன் பொருள் என்ன?
6. செய்யுளில் எதுகைத் தொடை அமைய வேண்டுமானால் இரண்டாம் எழுத்து எவ்வாறு இருக்க வேண்டும்?
7. பாவின் இனங்கள் எத்தனை?
8. பாவின் உறுப்பு என்பதன் வேறு பெயர் என்ன?
9. செய்யுளின் இறுதி உறுப்பு எது?
10. வஞ்சிப்பாவிற்குரிய ஓசை எது?
11. கலிப்பாவிற்குரிய ஓசை எது?
12. ஆசிரியப்பாவிற்குரிய ஓசை எது?
13. வெண்பாவிற்குரிய ஓசை எது?
14. பாக்களின் ஓசைக்குரிய பெயர் எது?
15. பாக்கள் மொத்தம் எத்தனை வகைப்படும்?
16. செய்யுளின் உறுப்புகளில் 'பா' என்பதன் பொருள் என்ன?
17. செய்யுளின் இறுதி எழுத்தோ அல்லது அசையோ ஒன்றி வருவது எது?
18. செய்யுளின் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எது?
19. செய்யுளின் முதல் எழுத்து ஒன்றி வருவது எது?
20. தொடை எத்தனை வகைப்படும்?
21. செய்யுளில் ஓசை நயத்திற்காக எழுத்துக்கள், அசைகள், சீர்கள் மீண்டும் வருவதை என்னவென்பர்?
22. ஆறு மற்றும் அதற்கு மேற்பட்ட சீர்களைக் கொண்ட அடி எது?
23. ஐந்து சீர்களைக் கொண்ட அடி எது?
24. நான்கு சீர்களைக் கொண்ட அடி எது?
25. மூன்று சீர்களைக் கொண்ட அடி எது?
26. இரண்டு சீர்களைக் கொண்ட அடி எது?
27. அடிகள் எத்தனை வகைப்படும்?
28. செய்யுளில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சீர்களைக் கொண்டு அமைவது எது?
29. நிரைமுன் நேர் வருவது எவ்வகைத் தளை?
30. நேர்முன் நேர் வருவது எவ்வகைத் தளை?
31. தளைகள் மொத்தம் எத்தனை வகைப்படும்?
32. செய்யுளில் சீர்கள் தம்மில் பொருந்துவதை குறிக்கும் உறுப்பு எது?
33. தேமாங்கனி என்பது என்ன?
34. தேமாச்சீர் மூன்றசைச் சீராக மாறும்போது எது சேரும்?
35. மூவசைச் சீர்கள் எத்தனை வகைப்படும்?
36. நேர்நிரை என்பது எவ்வகைச் சீர்?
37. நிரைநிரை என்பது எவ்வகைச் சீர்?
38. நிரைநேர் என்பது எவ்வகைச் சீர்?
39. நேர்நேர் என்பது எவ்வகைச் சீர்?
40. ஈரசைச் சீர்கள் எத்தனை வகைப்படும்?
41. செய்யுளில் அசைகள் சேர்ந்து உருவாவது எது?
42. ஓரசைச் சீர்களில் 'நிரை' என முடிவது எது?
43. ஓரசைச் சீர்களில் 'நேர்' என முடிவது எது?
44. நிரைபு அசைக்குரிய வாய்ப்பாடு எது?
45. நேர்பு அசைக்குரிய வாய்ப்பாடு எது?
46. நிரை அசைக்குரிய வாய்ப்பாடு எது?
47. நேர் அசைக்குரிய வாய்ப்பாடு எது?
48. குறில், நெடில் எழுத்துக்கள் தனித்தோ அல்லது இணைந்தோ ஒலிப்பது எது?
49. செய்யுளில் ஓசைக்கு அடிப்படையாக அமைவது எது?
50. யாப்பிலக்கணத்தின்படி செய்யுளின் உறுப்புகள் மொத்தம் எத்தனை?